விஜய் சேதுபதியை ‘கிளப்’ பாடகராக்கிய யுவன் ஷங்கர் ராஜா!

Get real time updates directly on you device, subscribe now.

டிகர், தயாரிப்பாளர் என இரட்டை அவதாரங்களை எடுத்த விஜய் சேதுபதி தற்போது பின்னணிப் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் ‘பேய் பசி’. ‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

Related Posts
1 of 9

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைக்கும் இந்த படத்தின் ஒரு கிளப் பாடலுக்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர்.

நல்ல படங்களுக்கு எப்போதுமே ஆதரவை தரும் விஜய் சேதுபதி ‘பேய் பசி’ படத்தில் இடம்பெறும் இந்த பாடலுக்காக பின்னணிப் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். வசனங்களை பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி அசத்தியுள்ளாராம்.

டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடிவமைப்பில் தேசிய விருதை பெற்ற பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில் மதனின் கலை இயக்கத்தில் இந்த பேய் பசி’ படம் தயாராகி வருகிறது.