இதுவரைக்கும் ”டேவிட் புள்ள” ; இனிமே ”வெர்ஜின் மாப்ளே” : சர்ச்சையை கிளப்பும் ஜி.வி.பிரகாஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

gv

டத்தின் கலெக்‌ஷன் வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம். ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் காரித்துப்பாத குறை தான் என்றாலு அது த்ரிஷா இல்லேன்னா நயன் தாரா படம் தான்.

செக்ஸ் படத்தில் கூட இப்படிப்பட்ட காட்சிகள் இருக்காது என்று சொல்லுமளவுக்கு இரட்டை அர்த்த காட்சிகளுடன், வசனங்களுடன் வந்த அந்தப்படம் ஜி.வி.பிரகாஷூக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

வசூலிலும் படம் சக்கை போட்டு போட்டதால் ஜி.வியும் அப்படத்தின் இயக்குநரும் பிஸியாக ஆரம்பித்து விட்டார்கள்.

முதல் படம் ஹிட்டானால் அதே டீம் மீண்டும் அடுத்த படத்தில் இணைவது வழக்கமான விஷயம். ஆனால் முதல் படம் பெருத்த சர்ச்சையை கிளப்பிய நிலையிலும் அடுத்ததாக ஒரு படத்திலும் இணைகிறார்கள் ஜி.வியும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும்!

Related Posts
1 of 3

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘விர்ஜின் மாப்ள’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

சீஸ் கார்னர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு படத்தை இயக்குகிறார்.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ திரைப்படமாவது ரிலீசுக்குப் பிறகு தான் சர்ச்சையை கிளப்பியது ஆனால் இந்தப்படத்தின் டைட்டிலே இப்போது பெரிய சர்ச்சையை கிளப்பி விட ஆரம்பித்திருக்கிறது.

விர்ஜின் மாப்ளே என்று டைட்டில் வைத்திருப்பது தான் அந்த சர்ச்சைக்கு காரணம். அதோடு இந்த டைட்டிலை வைக்கச் சொல்லி இயக்குநருக்கு சிபாரிசு செய்ததே ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தானாம்.

சென்ற படத்தில் டேவிட் புள்ள என்ற வார்த்தை பிரபலமானது போன இந்தப்படத்தின் டைட்டிலான வெர்ஜின் மாப்ளே டைட்டிலும் ரசிகர்களிடையே பிரபலமாகும் என்பதால் இயக்குநரும் டைட்டிலுக்கு ஓ.கே சொல்லியிருக்கிறார்.