இறங்கி வராத சிம்பு! : ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தை கிடப்பில் போட்டாரா கெளதம் மேனன்?

”காக்கா இத்துணூண்டு ஆய் போனதுக்காடா இவ்ளோ பெரிய கலவரம்” என்று வடிவேலு ஒரு படத்தில் காமெடி செய்வாரே அப்படித்தான் ஆகி விட்டது சிம்புவை நம்பி கெளதம் மேனன் ஆரம்பித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் லேட்டஸ்ட் நிலவரம்!
‘தள்ளிப் போகாதே’ பாடல் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில் சம்பளத்தில் இத்துணூண்டு பாக்கி வைத்து விட்டதாக புகார் கூறி இப்படத்தின் படப்பிடிப்புக்கு சிம்புவை அனுப்ப மறுத்து விட்டார் அப்பா டி.ஆர்.
டி.ஆரின் இந்த நடவடிக்கையைப் பார்த்து நொந்து போன கெளதம் மேனன் ஒரு வார இதழில் அதைப்பற்றி வெளிப்படையாக புலம்பித் தீர்த்ததோடு, பணத்தையும் விரைவில் தயார் செய்து தந்து விடுவதாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சு வார்த்தை ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகவும் கடுப்பானவர் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மிச்சம் மீதி வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு ‘ஜெயம்’ ரவி, பிருத்விராஜ், புனீத் ராஜ்குமார், சாய் தரம் தேஜ் ஆகிய நான்கு மொழி ஹீரோக்கள் இணையும் புதுப்படத்தை ஆரம்பிக்கும் வேலையில் இறங்கி விட்டாராம். அனுஷ்கா, தமன்னா இருவரும் தான் இப்படத்தின் நாயகிகளாம்.