அஜித்தை நான் திட்டலீங்க… : விளக்கம் கொடுத்தார் கருணாஸ்

Get real time updates directly on you device, subscribe now.

karunaas1

டிகர் சங்கத் தேர்தலின் சூடு இப்போது தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு பாண்டவர் அணி சார்பில் வெற்றிபெற்ற கருணாஸுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் யாரோ சில விஷமிகள்.

அதுவும் எந்த வம்பு தும்புக்கும் போகாத அஜித்தை அவர் திட்டினார் என்பது தான் குற்றச்சாட்டு!

நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை, எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது” என்ற கருத்து கருணாஸ் ட்விட்டரில் வெளியானது.

Related Posts
1 of 31

இப்படி ஒரு ட்வீட் வெளியானதும் கொதித்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள். கருணாஸை கண்ணாபின்னாவென்று கலாய்த்து விட விஷயத்தை கேள்விப்பட்ட கருணாஸோ பதறிப்போய் விட்டார்.

யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார் கருணாஸ்.

அஜித் ரசிகர்கள் கூல் ஆகுங்கப்பா..!