விக்ரம் ஒரு திமிர் பிடித்த நடிகர்! : அமெரிக்க வாழ் இந்தியர்கள் காட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

vikram4

‘இருமுகன்’ என்று டைட்டில் கொண்ட படத்தில் நடிப்பதாலோ என்னவோ சமீபகாலமாக விக்ரமின் நிஜ வாழ்க்கையின் நடவடிக்கைகள் எல்லாமே இரண்டு விதங்களாகவே இருக்கிறது.

அது திரையில் மட்டுமே இருந்து விட்டால் பிரச்சனையில்லை. திரைக்கு வெளியே அதுவும் ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுவது தான் அவருக்கு அவமானத்தை  வழிய தேடித்தந்திருக்கிறது.

”விக்ரமைப் போல ஒரு திமிர் பிடித்த நடிகரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை” என்று குமுறுகிற அளவுக்கு ஒரு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறார் விக்ரம்.

அதுவும் இங்கல்ல அமெரிக்காவில்!

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஒவ்வொரு வருடமும் நியூயார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள். ‘கிரான்ட் பரேட்’ என்ற அந்த நிகழ்வில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

இந்த வருடத்திற்கான விழா நேற்று ஆகஸ்ட் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து பாபா ராம்தேவ், அபிஷேக் பச்சன், விக்ரம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டுள்ள இந்த விழாவில் தான் நடிகர் விக்ரம் இதுதான் என்னுடைய ஒரிஜினாலிட்டி என்று தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விக்ரம் வந்த போது அரங்கத்தில் உள்ள பலரும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், பேசவும் அருகில் சென்றுள்ளனர். ஆனால், விக்ரம் அவர்களுடன் பேசவும் விருமபாமல், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் விரும்பாமல் வெறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறார். இது, அமெரிக்க வாழ் இந்தியவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க தமிழ் சங்கத் தலைவரான பிரகாஷ் எம் சுவாமி அவரது முகநூலில் கூறியிருப்பதாவது :

Related Posts
1 of 17

“உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் கூட நீங்கள் ஏற்கவில்லை.

உங்களுடன் வந்த அபிஷேக் பச்சன் அனைவருடனும் நட்பாகப் பழகி, ரசிகர்களுடன் கைலுக்கிய போது, நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொண்டீர்கள்.

உண்மையில் நாங்கள் பிரபுதேவாவைத்தான் அழைக்கலாம் என இருந்தோம். ஆனால், அவருடைய வேலைப்பளு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதற்கு முன் இந்த இந்திய நாள் பரேட் நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் மிகவும் எளிமையாகப் பழகினார்கள். ரசிகர்களை சந்திப்பதற்கும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கம் அவர்கள் தயங்கவேயில்லை.

விக்ரமை வெறும் 30, 40 பேர் சூழ்ந்ததற்கே அவர் இப்படி நடந்து கொண்டார், ஆனால், சரத்குமாரை ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது, இருந்தாலும் அவருடைய பணிவான அன்பை நியூயார்க் மக்கள் மறக்க மாட்டார்கள். விக்ரம், நீங்கள் சரத்குமாரை விட தகுதியிலும், சீனியாரிட்டியிலும் பெரியவரா ?.

அது மட்டுமல்ல, அழைப்பிதழில் ‘தென்னிந்திய சூப்பர் ஸ்டார்’ என கண்டிப்பாகப் போடச் சொன்னீர்கள். வெளிநாட்டு நிகழ்வுகளில் விக்ரமை அழைக்க அவர் தகுதியானவர் அல்ல. அவருக்கு புகழில் தான் ஒரு ரஜினிகாந்த், ஷாரூக்கான் என நினைப்பு.

ஏர் இந்தியாவின் முதல் வகுப்பில் உங்களை அழைத்து வந்தது, சுற்றிப் பார்க்க அல்ல, அவ்வளவு செலவு செய்தது அவமானத்தை அனுபவிக்க அல்ல. உங்கள் மீது வெட்கப்படுகிறோம், நமது நாட்டுக்கு அவமானம், திரையுலகத்திற்கு அவமானம், நீங்கள் திமிர் பிடித்த ஒரு நடிகர், திமிர் பிடித்த அணுகுமுறை கொண்டவர்,” என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘சிறந்த நடிகர்’ என்கிற பெயர் மட்டும் போதுமா என்பதை இனி விக்ரம் தான் யோசிக்க வேண்டும்!