சினிமாவுல எது கஷ்டம்? : விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
இயக்குநர் சுசீந்திரன் ஹிட் வட்டத்திலிருந்து இன்னொரு இயக்குநர் தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார்.
படத்தின் பெயர் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’, இயக்குநர் நாகராஜன்.
டைட்டிலைப் போலவே கதையும் காதலும், காமெடியும் கலந்த கலவை தான்!
ரிஜின் ஹீரோவாக அறிமுகமாக விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்த ஆர்ஷிதா ஹீரோயினாக நடிக்கிறார்.
படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் பங்ஷனில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி இயக்குநர் நாகராஜின் தன்னம்பிக்கையைப் பற்றியும், அவருடன் தனது நட்பு பற்றியும் மறக்காமல் வெளிப்படையாக சிலாகித்துப் பேசினார்…
”இன்னைக்கு இந்த விழாவுக்கு நான் வந்ததுக்கு ரெண்டு பேர் முக்கியமான காரணம். ஒருத்தர் இந்தப் படத்தோட டைரக்டர் நாகராஜன்.
அவர் 2009ல என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றதுக்கு கேமராமேன் இளையராஜாவை வெச்சு ஒரு ஆடிஷன் பார்த்தார். அதுக்கப்புறம் சுசீந்திரன் சாரோட ஆபீஸ்ல அடிக்கடி பார்ப்பேன்.
நம்மளோட வாழ்க்கையில சில நேரங்கள்ல திடீர்னு நல்லா சந்தோஷமா இருப்போம், இல்லேன்னா டல்லா இருப்போம். ஆனால் நாகராஜன்கிட்ட இந்த வித்தியாசம் இருக்கவே இருக்காது. எப்போதுமே ரொம்ப எனர்ஜிடிக்கா, ஸ்ட்ராங்க்கா இருப்பார். அது அவரோட பெரிய பிளஸ்.
நாங்க பண்றதா இருந்த படம் தள்ளிப்போச்சு, அப்புறம் நடக்கவே இல்லை. அப்படியிருந்தும் இப்போ இந்தப்படம் பண்ற இன்னைக்கு வரைக்கும் அதே எனர்ஜி லெவல்ல தான் இருக்கார்.
இன்னொரு ஆள் யார்ன்னா ஹீரோயின் ஆர்ஷிதா. அவங்க என்னோட ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துல ஹீரோயினா நடிச்சவங்க. என்னோட படத்தை விட இந்தப்படத்துல ரொம்ப அழகா இருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க.
ரொம்ப சாதாணமா நம்மளை ஸ்க்ரீன்ல காட்டுறது தான் ரொம்பக் கஷ்டம். அதை ரொம்ப ஈஸியா பண்ணிருக்கார் ஹீரோ ரிஜின். அவரோட உசரத்தை விட பெரிய உசரத்துக்கு வரணும்.
காதலும், காமெடியும் கலந்த படம்னு இயக்குநர் சொன்னார். கண்டிப்பா சக்சஸ் ஆகும் என்று வாழ்த்தினார் விஜய் சேதுபதி.