வடிவுடையான் ஜீவன் கூட்டணியில் ஹாரர் படம்

Get real time updates directly on you device, subscribe now.


6.2, ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது
வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் ”

காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார்.