‘இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம் என் தகுதிக்கு மீறியது : அடக்கி வாசித்த தனுஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

dhanush1

னுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் தொடரி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் பங்ஷன் நேற்று காலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார். அடுத்தடுத்து பேச வந்த பிரபலங்களும் அந்தப் பட்டத்துடன் தனுஷை வாழ்த்தினார்கள்.

இதைப்பார்த்ததும் தனுஷ் பேச வந்த போது இளைய சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.

ஆனால் இதெல்லாம் என் தகுதிக்கு மீறியது என்று அடக்கியே வாசித்தார் தனுஷ்.

நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து பேசியதாவது :

Related Posts
1 of 51

‘‘இங்கே என் தகுதிக்கு மீறி என்னை சிலர் பாராட்டி பேசினார்கள். அப்படி பேச வேண்டாம். எனக்கு கூச்சமாக இருக்கிறது. என் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்கள் அப்படி பேசுவதாக எடுத்து கொள்கிறேன். அவர்களின் அன்புக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நான், ‘டூப்’ போடாமல் நடித்திருப்பதாகவும், ஓடும் ரெயிலில் கூரை மீது ஏறி நின்று அதிக ‘ரிஸ்க்’ எடுத்து சண்டை போட்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். அதற்கான பாராட்டுகள் முழுவதும் டைரக்டர் பிரபு சாலமனுக்குத்தான் சேர வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்த போது, என் கை எலும்பு முறிந்து விட்டது. அதில் இருந்து உயரமான இடங்களில் ஏறி நின்றால், என் தலை ‘கிர்’ என்று சுற்றும். இந்த படத்தில், ஓடும் ரெயில் கூரை மீது ஏறி நின்று சண்டை போட வேண்டும் என்றதும், தலை சுற்றுமே என்று நினைத்தேன்.

அதை டைரக்டர் பிரபு சாலமன் புரிந்து கொண்டு ரெயிலின் கூரை மீது முதலில் அவர் ஏறி நின்று, அந்த இடம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பார். அதன் பிறகே என்னை மேலே வரச் சொல்வார். என்னை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். எனவே பாராட்டுகள் முழுவதும் அவருக்கும், ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தான் பொருந்தும்.

இந்த படத்துக்காக முதன்முதலாக பிரபு சாலமன் என்னை சந்தித்த போது, அவரிடம் நான் கதை கேட்கவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால், ‘‘எப்ப கால்ஷீட் வேண்டும்?’’ என்று கேட்டேன். இப்போது படம் முடிந்து விட்டது. என் நம்பிக்கையை அவர் காப்பாற்றி விட்டார். படம் நன்றாக வந்திருக்கிறது. அதேபோல் சத்யஜோதி பிலிம்ஸ் எப்போது ‘கால்ஷீட்’ கேட்டாலும், நடித்துக் கொடுப்பேன்.

ரசிகர்கள் என்னை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் பெருமைப்படுகிற அளவுக்கு நான் கடுமையாக உழைப்பேன். ரசிகர்களும் நான் பெருமைப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மா-அப்பாவுக்கு நல்ல மகனாக, மனைவிக்கு நல்ல கணவராக, குழந்தைக்கு நல்ல தந்தையாக இருக்க வேண்டும். குடும்பம்தான் முக்கியம்.’’ இவ்வாறு தனுஷ் பேசினார்.