டீப் லவ்… : தெலுங்கு ஹீரோவை திருமணம் செய்கிறார் சமந்தா!
சித்தார்த்தை பிரிந்த பிறகு சிங்கிளாக இருப்பார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, நான் சிங்கிளாக இல்லை. ஒரு ஹீரோவை லவ்விக்கொண்டிருக்கிறேன் என்றார் சமந்தா.
அப்படி சொன்னதோடு அதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. அதோடு நான் படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால் இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்றும் சொன்னார்.
இது போதாதா? யார் அந்த ஹீரோ என்கிற கேள்விக்கு மீடியாக்கள் விடை தேடாமல் விடுமா என்ன?
வலை வீசிய மீடியாக்களின் வலையில் வசமாக சிக்கியிருப்பவர் பிரபல தெலுங்கு ஹீரோவும், நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யா.
ஆமாம், சமந்தா காதலிப்பது நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவைத்தான் என்று தம்பட்டம் அடிக்கின்றன ஆந்திரா, தெலுங்கானா மீடியாக்கள். ஆனாலும், சம்பந்தப்பட்ட இருவருமே இந்த செய்திக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
சமந்தா நடித்த, ‘அ ஆ’ படம் சமீபத்தில் வெளியானது அல்லவா? அந்தப்படத்தை நாக சைதன்யாவுடன் சேர்ந்து பார்த்து ரசித்த புகைப்படங்கள் இணைய உலகில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அது மட்டுமே பல பார்ட்டிகளிலும் மேற்படி ஜோடியை பல பிரபலங்கள் பார்த்ததாக சொல்கிறார்கள்.
சமந்தா – நாக சைதன்யா இருவருமே இந்த செய்தியை மறுக்கவில்லை என்றாலும் காதலிப்பது மட்டும் உண்மை என்கிறது ஆந்திர வட்டாரம்.
காதல் திருமணத்தில் கை கூடினால் சரி!