வைபவுக்கு வில்லன் ஆன டைரக்டர் வெங்கட் பிரபு!
‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் நிதின் சத்யா மீண்டும் ஒரு புதுப்படத்தை தயாரிக்கிறார்.
முதன் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வைபவ். பிரபல சின்னத்திரை நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
போலீஸ் அதிகாரி வைபவ்வை தெறிக்க விடும் வில்லன் கேரக்டரில் முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார்.
70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் படத்துக்கு பெயரிடப்படவில்லை. ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.