பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா பட போஸ்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் ‘காற்றின் மொழி’.

மொழி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 72-வது சுதந்திர தின வாழ்த்துகளோடு வெளியான ‘காற்றின் மொழி’ படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போஸ்டரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் தான் அந்த பரபரப்புக்கு முக்கிய காரணம்.

பெண்களுக்கான பத்து கட்டளைகள் என்கிற டைட்டிலோடு வெளியாகியிருந்த அந்த போஸ்டர் குறித்து ஜோதிகாவிடம் பேசியபோது, ‘காற்றின் மொழி’, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு நானே டப்பிங் பேசி வருகிறேன்.

பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது என்று கூறினார்.

போஸ்டரில் குறிப்பிட்டிருந்த பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்..

1. உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.

2. நீ விரும்புவதை செய்வாயாக.

Related Posts
1 of 9

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.

4. பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.

5. குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.

6. வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.

7. நீ சபதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.

8. உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக

9. ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.

10. மனதில் பட்டத்தை சொல்வாயாக .