கஸ்தூரியின் வாய்க்கொழுப்பு – கே.எஸ்.ரவிகுமார் செம கலாய்!

Get real time updates directly on you device, subscribe now.

சீனியர் நடிகர்களை திரைப்பட விழாக்களில் கலாய்ப்பது நடிகை கஸ்தூரிக்கு வாடிக்கையாகி விட்டது.

அப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவருடைய அப்பா சிவக்குமாரை செல்பி மேட்டரை வைத்து மேடையில் கலாய்த்து கார்த்தியிடம் செமையாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அதேபோல நேற்று நடந்த ‘மாளிகை’ பட விழாவிலும் நடிகர் கமல்ஹாசனை கலாய்த்தார்.

Related Posts
1 of 12

ஆண்ட்ரியா நாயகியாக நடித்த ‘மாளிகை’ பட விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கஸ்தூரி அந்தப்படத்தில் நடித்த கமல் என்ற நடிகரை பேச அழைக்கும் போது ”இங்கேயும் கமல் என்று ஒரு நடிகர் இருக்கிறார். அவர் பேசுவது யாருக்குமே புரியாது. நீங்களாவது புரியும்படி பேசுங்கள்” என்று அழைத்தார்.

இதை அங்கிருந்த யாரும் ரசிக்கவில்லை. ஆனால் கஸ்தூரி மட்டும் சிரித்துக் கொண்டார். அதே விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும், கமலின் நெருங்கிய நண்பருமான கே.எஸ்.ரவிகுமார் ”இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளர் கஸ்தூரியையே அழகா காட்டியிருக்கிறார்” என்று கமலை கலாய்த்த கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செம கலாய் கலாய்த்தார்.