கோலிவுட்டே வேண்டாம்.. – விஜய் தேவரகொண்டா அதிரடி முடிவு
‘அர்ஜூன் ரெட்டி’ தெலுங்கு படம் மூலம் ஆந்திர ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜய் தேவரகொண்டா.
அவர் தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தின் மூலம் பிரம்மாண்ட ஹீரோவாக அறிமுகமானார். அந்தப்படம் தனக்கு தமிழிலும் ஒரு பெரிய ஓப்பனிங்கை கொடுக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தார் விஜய். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.
இதனால் அப்செட்டானவர் இனி கோலிவுட்டே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாராம். ‘நோட்டா’வைத் தொடர்ந்து பல டைரக்டர்கள் தமிழில் நடிக்க அவரைக் கூப்பிட்டாலும் அவரோ ரொம்ப யோசிக்கிறாராம்.
அதே சமயத்தில் தன்னைத் தேடிவந்த பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கபீர்கான் இயக்கும் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடமாம் விஜய்க்கு.
சிக்ஸர் அடிங்க ஜி…