விஜய் ஆண்டனி – அர்ஜூன் கூட்டணியில் வேகமாக வளரும் ‘கொலைகாரன்’
இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக அவதாரம் எடுத்து ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தந்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி.
தற்போது அவர் நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பி.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.
ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.