‘மாரி’ சோலோ ரிலீஸ் : அடித்துக் கொள்ளும் தனுஷ் – சிம்பு ரசிகர்கள்!
”நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு, இதை நம்பாதவங்க வாயில மண்ணு”ன்னு தனுஷும் – சிம்புவும் ஒன்றாக போஸ் கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் அதை நம்பத் தயாராக இல்லை போலிருக்கிறது.
எப்படி விஜய் – அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு புது ரிலீசின் போதும் அடித்துக் கொள்கிறார்களோ..? அவர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் தனுஷ் – சிம்பு ரசிகர்கள்.
ஜுலை 17-ஆம் தேதியான இன்று தனுஷின் ‘மாரி’ படமும், சிம்புவின் ‘வாலு’ படமும் ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொடுக்கல் வாங்கல் காரணமாக சிம்புவின் பட ரிலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை போட்டு விட்டது.
இதனால் சிம்பு ரசிகர்கள் அப்செட்டில் இருக்க, தனுஷ் ரசிகர்களோ எந்தவித போட்டியும் இல்லாமல் சோலோவாக வருவதை எண்ணி சந்தோஷத்தில் இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே உலகம் முழுவதும் இன்று ரிலீசான ‘மாரி’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் படம் என்கிற பெயரையும் பெற்று விட்டது.
படத்தைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் ”நாங்க எதிர்ப்பார்த்ததை விடவும் படம் 100 மடங்கு தர லோக்கலா, செமையா இருக்கு” என்று தங்கள் மகிழ்ச்சியை ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அவர்களின் இந்த கொண்டாட்டத்தை சிம்பு ரசிகர்களால் பொறுக்க முடியவில்லை போலும். ‘வாலு’ ரிலீசாக ஆத்திரத்தில் இருக்கும் அவர்கள் “என்ன மொத்தமா வெச்சு செஞ்சுட்டாங்களா..?” என்று நக்கலாக கமெண்ட்டுகளைப் போட்டு தனுஷை கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தனுஷ் ரசிகர்களும் சிம்பு ரசிகர்களுக்கு சரியான பதிலடியை கொடுத்து வருகிறார்கள். ஆக இந்த சண்டை இன்னும் ஒருவாரம் இருக்கும் என்பது மட்டும் உண்மை.