‘தர்பார்’ அழைப்பு வருமா? – காத்திருக்கும் நிவேதா தாமஸ்
ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க அங்கேயே கதை நடப்பது போல படம் இருக்கும் என்பதால் சுமார் இரண்டு மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினி.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போல இந்தப் படத்திலும் ரஜினிக்கு மகள் கேரக்டர் ஒன்று இருக்கிறது. இதில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை ஒருவரை நடிக்க வைக்க நினைத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதற்காக ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸை ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் இன்னும் ஏ.ஆர்.முருகதாஸிடமிருந்து நிவேதாவுக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். ஏற்கனவே இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே மீடியாக்களில் கசிந்து விட்டதால் கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ் நிவேதாவை படத்திலிருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.