ஹீரோவாகும் மன்சூர் அலிகான்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் இந்த ஆண்டு சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா ஆகியோருடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி நடிக்கவுள்ளாராம்

அந்தப் படித்திற்காக தன் உடலை வருத்தி வொர்க் அவுட் செய்து வரும் மன்சூர் அலிகான்
தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம்.