பிளான் பண்ணிப் பண்ணணும் ரிலீஸ் அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.


ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம் “பிளான் பண்ணி பண்ணனும்” இப் படத்தலைப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் என்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Posts
1 of 5

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். 2020 மார்ச் மாதம் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.