அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்கும் ஹெச்.வினோத்!
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தில் இணையப் போகும் இயக்குனர் யார் என்பது தான் ரஜினி ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.எஸ்.ராஜமெளலி, மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் என ரஜினியின் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்களை கோடம்பாக்கத்தில் அடுக்குகிறார்கள்.
இதற்கிடையே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வரும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்த ஹெச்.வினோத். ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு அடுத்து அஜித்தை வைத்தே நேரடித் தமிழ்ப்படம் ஒன்றை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அஜித் காம்பினேஷன் ஹெச்.வினோத்துக்கு செட் ஆகாததால் ரஜினியிடம் கதை சொல்லி அவரை வைத்து இயக்கத் தயாராகி வருகிறாராம்.
ஏற்கனவே ரஜினியை வைத்து படம் இயக்கப் போகும் இயக்குனர் லிஸ்ட்டில் கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோர் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் தற்போது ஹெச்.வினோத்தும் சேர்ந்திருக்கிறார். இதில் எஸ்.எஸ். ராஜமெளலி தற்போது ஆர். ஆர். ஆர். என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.