விருதோடு, விருந்தும் கொடுத்து நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்!

Get real time updates directly on you device, subscribe now.

யக்குனர்கள் பொன்ராம், எம்.பி கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர்.

அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 159

இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படப்பிடிப்பில் மதியம் விருந்தும், விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

”கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று வெற்றி பெற்ற அணியினர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.