சொந்தப் படத்தின் வெற்றிக்காக சூர்யா போடும் மாஸ்டர் ப்ளான்!

‘36 வயதினிலே’ படத்துக்கு கிடைத்த வெற்றி சூர்யாவுக்கு தொடர்ந்து படம் தயாரிப்பதில் பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.
குறிப்பாக அந்தப் படத்துக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பார்த்து பூரித்துப் போயிருக்கிறார் சூர்யா.
இதனாலேயே அடுத்து 2டி எண்டர்டெயிமெண்ட் சார்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாரித்து வரும் ‘ஹைக்கூ’ படத்தை குழந்தைகளுக்கான படமாக மட்டுமில்லாமல் பெண்களுக்கும் பிடிக்கு விதமாகவும் சில விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்குமாம்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் ஆடியோ பங்ஷனை பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
அதோடு இது தனது இரண்டாவது தயாரிப்பு என்பதால் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்று நினைக்கும் சூர்யா ‘ஹைக்கூ’ படத்தின் புரமோஷன்களுக்காக சில நாட்களை ஒதுக்கி ஸ்பெஷல் புரமோஷன் வீடியோக்களில் நடித்துக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம்.
இதற்காக தான் தற்போது நடித்து வரும் 24 படத்தின் படப்பிடிப்புக்கு சில நாட்கள் விடுமுறை விட்டுருக்கிறார்.
சொந்தப்படம்னாலே பயம் தான் போலிருக்கு…?