விஐபி 2 என்னாச்சு..? : தனுஷ் ‘தங்க மகன்’ ஆனதன் ரகசியம்

Get real time updates directly on you device, subscribe now.

dhanush1

ரு படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணைந்து விட்டால் என்ன இரண்டாம் பாகமா? என்கிற கேள்வியை எல்லோரும் எழுப்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

அப்படித்தான் தனுஷின் தயாரிப்பில் வேல்ராஜ் இயக்கிய ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தது.

டைட்டில் வைக்கப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட போது ‘வி ஐ பி 2’ படம் தயாராகிறது என்று ஆளாளுக்கு அடித்து விட்டார்கள்.

Related Posts
1 of 48

தனுஷுடன் சமந்தாவும், எமி ஜாக்சனும் நடித்துள்ள இப்படத்துக்கு டைட்டிலே ‘வி ஐ பி 2’ தான் என்று எல்லோரும் உறுதியாக நம்பிய நிலையில் நேற்று படத்துக்கான அதிகாரப்பூர்வமான டைட்டிலை அறிவித்தார் தனுஷ்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தோட கதைக்களம் வேற, இந்தப் படத்தோட கதைக்களம் வேற. அதனாலேயே அந்தப் படத்தோட இரண்டாம் பாகம்னு இந்தப் படத்தை சொல்லவே முடியாது என்று அறிவித்த தனுஷ் வி.ஐ.பி இரண்டாம் பாகம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டார். அதோடு தனது புதுப்படத்துக்கு ‘தங்க மகன்’ என்றும் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்தால் அது இரண்டாம் பாகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?

இனிமேலாவது இந்த மாதிரியான முடிவை மூட்டை கட்டி வையுங்கள் ரசிகர்களே…