டைரக்டர் ஆகப் போகிறார் விக்ரம் : ஹீரோ யார் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

vikram1

’10 எண்றதுக்குள்ள’

எதுக்குத்தான் இந்தப் படத்தை எண்ணிக்கையில் சேர்த்தோமோ? என்று நொந்து நூடுல்ஸ் ஆன விக்ரமுக்கு விரைவில் வெளிவர இருக்கும்  ‘இருமுகன்’ படம் தான் தெம்பைக் கொடுத்திருக்கிறது.

படத்தின் ட்ரெய்லருக்கும், பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு காணப்படுவதைக் கேள்விப்பட்டு நிம்மதியடைந்திருக்கும் சீயான் விக்ரம்

நடிப்புத் துறையிலிருந்து சற்றே விலகி இயக்குநராகும் முடிவை எடுத்திருக்கிறார்.

Related Posts
1 of 95

ஏற்கனவே விக்ரம் சென்னையை மூழ்கடித்த பெரு வெள்ளம் குறித்த வீடியோ இசை ஆல்பம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அவரே இயக்கிய இந்த இசை ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அது போக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கி விட்ட விக்ரமுக்கு சமீபகாலமாக இயக்குநராகும் ஆசை வந்திருக்கிறது.

விரைவில் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்திருக்கும் விக்ரம் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்தப் படத்தில் ஹீரோவாக விஜய்யை நடிக்க வைப்பேன் என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.

ஒருவேளை அவர் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவருடைய அடுத்த சாய்ஸ் ஜெயம் ரவியாம்!

அட்ரா சக்க..! அட்ரா சக்க..!! அட்ரா சக்க..!!!