மே-27ல் வெளியாகும் விஷமக்காரன்!

Get real time updates directly on you device, subscribe now.

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார்.