‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு அஜீத் வரவில்லை, ஆனால்?
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் சென்னையில் ”இளையராஜா 75” என்ற பெயரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை நேரில் சந்தித்து சிறப்பு விருந்தினர்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ரஜினியும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். அடுத்து கமலை சந்தித்து அவரையும் அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையே ஒட்டுமொத்த திரையுலகமும் கலந்து கொள்ள இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
நிகழ்ச்சி நடக்கும் இரண்டு நாட்களிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி பிரான்ஸ் நாட்டில் நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்வதால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை
மேலும் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்கள் இதில் கலந்து கொள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. விஜய் வந்தாலும், எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜீத் இந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டார் என்கிறார்கள். ஆனால் ஷாலினி தீவிரமான இளையராஜாவின் ரசிகை என்பதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்கிறார்கள்.
கட்டணம் கொடுத்து பார்க்கும் நிகழ்ச்சி என்பதால், முடிந்தவரை அத்தனை திரையுலக பிரபலங்களையும் அழைக்க முடிவு செய்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.