தீபாவளி வசூல் : அப்பாவை ஓவர் டேக் செய்த ஸ்ருதிஹாசன்!

Get real time updates directly on you device, subscribe now.

shiruthi

ழக்கம் போல இந்த தீபாவளிக்கும் வேதாளம், தூங்காவனம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீசாகியிருக்கிறது.

இதில் வேதாளம் படத்தில் அஜித் ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். தூங்காவனத்தில் அவருடைய அப்பா கமல்ஹாசன் நடித்திருக்கிறார்.

இதனால் அஜித் – கமல் படங்கள் மோதல் என்பதை விட தீபாவளிக்கு அப்பா கமலும், மகள் ஸ்ருதிஹாசனும் மோதுகிறார்கள் என்கிற பேச்சும் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

Related Posts
1 of 24

சரி இரண்டு படங்களில் வசூல் ரீதியாக எது ஜெயித்தது என்று பார்த்தால் அப்பா கமலை விட மகல் ஸ்ருதிஹாசன் தான் வசூலில் முன்னணியில் இருக்கிறார்.

‘வேதாளம்’ படத்தின் முதல் நாள் வசூல் 200 கோடியைத் தொட்டது. ஆனால் ‘தூங்கா வனம்’ வசூல் 12 கோடியைத் தான் தொட்டது. அதேபோல ‘வேதாளம்’ படத்துக்கு 520 தியேட்டர்கள் கிடைத்தது. ‘தூங்கா வனம்’ படத்துக்கு 375 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது.

இப்படித்தான் ‘உத்தம வில்லன்’ ரிலீசான போது ஸ்ருதிஹாசன் நடித்த ‘கப்பார்’ திரைப்படம் ரிலீசானது. அந்தப் படங்களின் வசூலைப் பொருத்தவரை ‘உத்தம வில்லன்’ தான் முதலிடத்தில் இருந்தது.

அந்த சாதனையை ‘வேதாளம்’ படத்தில் மகள் ஸ்ருதிஹாசன் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.