புதிய கெட்டப்பில் வலம் வரும் கமல்ஹாசன் – எதற்காகத் தெரியுமா?
எப்போதுமே க்ளீன் ஷேவிங் ஸ்மார்ட் லுக்கில் காட்சி தரும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக ஷேவ் செய்யாத சால்ட் அண்ட் பெப்பர் பெரிய சைஸ் மீசையுடன் புதிய கெட்டப்பில் காட்சி தருகிறார்.
அவருடைய இந்த புதிய கெட்டப்பைப் பார்த்த ரசிகர்கள் ஏன் கமலுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையா? என்று சந்தேகம் எழுப்பினர். அதோடு அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனால் தான் கமலால் ஷேவ் செய்யக் கூட நேரமில்லாமல் இருக்கிறார் போல என்றும் சில ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இந்த இரண்டு சந்தேகங்களிலும் உண்மை இல்லையாம்.
‘விஸ்வரூபம் 2’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் கமல். படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தின் கேரக்டருக்காகவே பெரிய சைஸ் சால்ட் அண்ட் பெப்பர் மீசையோடு புது கெட்டப்பில் வலம் வருகிறாராம் கமல்.