மது, புகை காட்சிகள் இல்லாத ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘நட்பே துணை’

Get real time updates directly on you device, subscribe now.

‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான ‘ஹிப் ஹாப் தமிழா’ அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் ‘நட்பே துணை.’ பார்த்திபன் தேசிங்கு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி ஆதி பேசியதாவது, ”அதிகமாக வாய் பேசிய என்னை ‘ஆம்பள’யில் அறிமுகப்படுத்தி, ‘மீசைய முறுக்கு’ படத்தில் என் ஹீரோ கனவை நனவாக்கி ‘நட்பே துணை’யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.

இப்படத்தின் கதையைக் சொல்லும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார்.

Related Posts
1 of 2

‘மீசைய முறுக்கு’ படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்தி வைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள். பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார்.

ஒருநாள் ‘ஹாக்கி ஸ்டிக்’ என்று கூறுவதற்கு பதில் ‘பேட்’ என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்இப்படத்தின் கடைசி 35 நிமிடங்கள் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும்.

‘மீசைய முறுக்கு’ படத்தின் வெளியீட்டிருக்காக கோயம்புத்தூருக்கு சென்ற போது ‘எரும சாணி’ விஜய்யின் அறிமுகம் கிடைத்தது. கரு.பழனியப்பன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும். மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இருக்கும் இந்தப்படம் இருக்கும் என்றார்” ஆதி.