என்ன பண்றது? : நயன்தாராவோட ‘டிசைன்’ அப்படி!
படப்பிடிப்புக்கு போன இடத்தில் நடித்தோமா? வந்தோமா? என்றில்லாமல் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ரொமான்ஸ் மூடை கெளப்பி விட்டார் நயன்தாரா.
‘நானும் ரெளடி தான்’ படப்பிடிப்பில் ஷூட்டிங் நடந்த நாட்களை விட இருவருக்கும் ரொமான்ஸ் நடந்த நாட்களே அதிகம். இதனால் சொன்ன நாட்களை விட கூடுதலான நாட்கள் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டு போயிருக்கிறது.
இழுவைக்கான காரணத்தைக் கேட்ட தயாரிப்பாளர் தனுஷோ ”ஏன்யா… உங்களுக்கு படம் எடுக்க பணம் கொடுத்தா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணிக்கிட்டிருக்கீங்களா?” என்று கொந்தளித்து விட்டார்.
தனுஷ் – விக்னேஷ் சிவன் மோதல் விவகாரம் நயனின் காதுகளை எட்டியிருக்கிறது.
அவர் தான் இளகிய மனம் படைத்தவர் ஆயிற்றே..?
மூன்றாவது காதலருக்காக தனது சம்பளத்தில் சில லட்சங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.
இப்படித்தான் சிம்புவை காதலித்த போது பல லட்சங்களையும், பிரபுதேவாவை காதலித்த போது சில லட்சங்களையும் செலவு செய்தார் நயன்.
என்ன பண்றது நயன்தாராவோட ‘டிசைன்’ அப்படி!