பெட்ரமாஸ் லைட்டே வேணுமா..? : கொஞ்சம் மாத்தி யோசிங்களேன் ‘கைப்புள்ள’
பெரிய இடைவெளிக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுத்தாலும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு ரசிகர்களிடையே இருக்கும் மவுசு இன்றைக்கும் இம்மியளவு குறையவில்லை.
அது குறையவும் குறையாது. அந்தளவுக்கு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் ஹீரோவாக நடித்த படங்களில் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மட்டும் தான் வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கடுத்து சமீபத்தில் ரிலீசாகி புழுக்கை கூட மிஞ்சாத எலி படம் வரை எல்லாப் படங்களும் அட்டர் ப்ளாப் தான்.
இப்படி தான் ஹீரோவாக நடிக்கிற படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவினாலும் வடிவேலுவின் ஹீரோ ஆசை மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை.
இன்றைக்கும் மற்ற ஹீரோக்கள் நடிக்கின்ற படங்களில் காமெடி ட்ராக்கில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.
ஆனால் அவரோ ‘ஒரு படமாவது ஹீரோவாக நடித்து சில்வர் ஜூப்ளி கொடுத்தாக வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறாராம்.
வடிவேலுவின் பிடிவாதம் அவருக்கே நியாயமா தெரிஞ்சா சரி!