இளையராஜா 1001 என்ற பெருமையோடு வரும் ‘ஒரு மெல்லிய கோடு’!

Get real time updates directly on you device, subscribe now.

shaam1

க்‌ஷயா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ”ஒரு மெல்லிய கோடு”.

இந்தப் படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக அக்‌ஷாபட், நேஹா சக்சேனா நடிக்கிறார்கள். மற்றும் மனிஷா கொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி, ஒளிப்பதிவு – சேது ஸ்ரீராம், நடனம் – விட்டல், கலை – ஆனந்தன், நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்

Related Posts
1 of 19

எழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ் தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை

படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷிடம் கேட்டோம்… நான் இயக்கிய அனைத்து படங்களுமே நிஜ சம்பவங்களை மையப்படுத்தி தயாரான படங்கள் தான். இந்த படத்தின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்‌ஷன் திரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.
படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து விட்டது விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் A.M.R. ரமேஷ்