ஏப்ரல் 12-ல் மீண்டும் ரிலீசாகும் சேரனின் ‘திருமணம்’

Get real time updates directly on you device, subscribe now.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.

இதில் நாயகனாக உமாபதி ராமையாவும், நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருந்தனர். முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Posts
1 of 136

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவ மணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை. அதோடு படத்தை திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.

இதையடுத்து தற்போது பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்கிறார் இயக்குனர் சேரன்.