மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன்! : “உறுதிகொள்” இயக்குனர் புலம்பல்

Get real time updates directly on you device, subscribe now.

ruthi-kol

சிறுபடத் தயாரிப்பாளர்கள் படமெடுப்பது தான் கடினமென்றால் இப்போதெல்லாம் அதற்கு சென்ஸார் வாங்குவது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.

மாஸ் ஹீரோக்களின் படங்களில் எத்தனையோ விதிமுறை மீறல் காட்சிகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சென்ஸார் போர்டு உறுப்பினர்கள் எங்களைப் போன்ற சிறுபட இயக்குநர்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன் என்று புலம்பியபடி கேள்வி எழுப்புகிறார் இயக்குநர் அய்யனார்.

வருகிற நவம்பர் 3-ம் தேதி ரிலீசாக இருக்கும் .பி.கே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘உறுதி கொள் படத்தின் இயக்குநரான இவர் சென்ஸார் சர்ட்டிபிகேட் வாங்குவதற்குள் பட்ட பாடுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்…

Related Posts
1 of 143

”ஜி.எஸ்.டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது.

சிறிய பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது மிகப்பெரிய சவாலாக இன்றைக்கு இருக்கிறது. படத்தோட தலைப்பை “எதிர்கொள்” என்றுதான் பதிவு செய்தோம். எங்களுக்கும் டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் குடுத்தாங்க பப்ளிசிட்டி செய்து வரும்போது அதே தலைப்பை இன்னும் இரண்டு பேர் பதிவு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க, சரி நம்ம இவங்ககிட்ட போட்டி போட முடியாதுன்னு தலைப்பை “உறுதிகொள்”னு மாத்தி பதிவு செய்தோம்.

ஒரு வழியா படத்தை முடிச்சி சென்ஸாருக்கு கொண்டுபோனா முதல் கமிட்டி படத்தை ரிஜெக்ட் பண்ணாங்க, வன்முறை மற்றும் ரேப் சீன் நிறைய இருக்குன்னு காரணம் சொன்னாங்க, நாங்களும் வாதிட்டோம். ரேப் சீன் படத்தில் காட்சியாக இல்லை, இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்கிற கொடுமையை விளக்க கதையாகத்தான் சொல்லியிருக்கிறோம் என முறையிட்டோம். ரிவைஸ் கமிட்டியில் இரண்டு ஷாட் கட்டும் சில ஆடியோ கரெக்‌ஷனுடன் UA சான்றிதழ் கிடைத்தது.

பெரிய படங்களுக்கு நிறைய மோசமான காட்சிகளை அனுமதிக்கும் சென்ஸார் சின்ன படத்தைத்தான் ரொம்பவும் குறிவைக்கிறாங்க, மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன். அனைத்து தரப்பும் பார்க்கக்கூடிய படமாகத்தான் “உறுதிகொள்” உருவாகி இருக்கிறது என்று சென்ஸார் வாங்க தான் அலைந்த கதையை புலம்பித் தீர்த்தார்” இயக்குனர் அய்யனார்.