சிம்பு தன் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்! : விவேக் சீரியஸ் அட்வைஸ்

Get real time updates directly on you device, subscribe now.

simbu

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இசையமைப்பாளராக அவதாரமெடுத்திருக்கிறார் நடிகரும், சந்தானத்தின் நெருங்கிய நண்பருமான சிம்பு.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் சிம்புவுக்கு சீரியஸாகவே ஒரு அட்வைஸைச் சொன்னார்…

அவர் சொன்னதை சிம்பு கேட்பாரா இல்லையா என்பதெல்லாம் வேறு, ஆனால் சொன்னது நியாயமானதாக இருந்தது என்பது உண்மை.

Related Posts
1 of 49

“இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் பெயரையும், சந்தானம் பெயரையும் மட்டும் சொல்லும் போது ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்யக்கூடாது. ஒரு விழாவென்று வந்து விட்டால், அதில் யாருடைய பெயரைச் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு”.

இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்த ஒரு பாடலை தயார் செய்து ஒருநாள் இரவு 12 மணிக்கு எனக்கு அனுப்பினார். அதை நான் கேட்டு ரசித்தேன். அதைக்கேட்ட என் மகளும் அப்பா செமையா இருக்கு என்றாள். சிம்பு மிகச்சிறந்த திறமைசாலி. அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது.

அவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களை தக்க வைத்துக் கொள்ள தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்துவதை விடுத்து சிம்பு முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிவுரையை சிம்புவுக்குச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது”
என்றார்.

நல்லா கேட்டுக்கங்க சிம்பு….