10 கோடியுடன் எஸ்கேப் ஆனாரா சிங்காரவேலன்? : ‘லிங்கா’ விவகாரத்தில் திடீர் திருப்பம் 

Get real time updates directly on you device, subscribe now.

 

rajini

‘லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்டதில் 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சிங்காரவேலன் தலைமையிலான வினியோகஸ்தர்கள் ரஜினிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், ரஜினியும் அவர்களை கண்டு கொள்ளாததால் மெகா பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

விவகாரம் எல்லை மீறிப்போவதை உணர்ந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவும், நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரும் வினியோகஸ்தர்களை கூப்பிட்டு பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி 32 கோடியில் முடிவாக 10 கோடி ரூபாய் இழப்பீடு வாங்கித்தருவதாக பேசியதை அடுத்து வினியோகஸ்தர்கள் சமாதானமானார்கள்.

Related Posts
1 of 29

இதற்கிடையே தயாரிப்பாளர் தரப்பில் தரப்பட்ட இந்த 10 கோடி ரூபாயை எப்படி பிரிப்பது என்று வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அந்த ‘பிரித்தல்’ பேச்சு வார்த்தை கடந்த சில தினங்களாகவே சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் அதில் எந்த முடிவும் எட்டப்படாததால் விரக்தியடைந்த திருநெல்வேலி வினியோகஸ்தர் ஐயப்பன் இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

பணத்தை தராமல் பேச்சு வார்த்தை இழுத்துக் கொண்டே போனதால் கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாக வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாயை போராட்டத்தை முன்னின்று நடத்திய திருச்சி வினியோகஸ்தர் சிங்காரவேலனே  வைத்துக் கொண்டதாகவும், அதை யாருக்கும் பிரித்து கொடுக்காமல் போக்கு காட்டி வருகிறார் என்று சக வினியோகஸ்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

பணத்தை வாங்கி பிரித்து தராமல் எஸ்கேப் ஆகி விட்டார் சிங்கார வேலன் என்றும், தற்கொலைக்கு முயன்றது திருநெல்வேலி வினியோகஸ்தரே இல்லை அவர் ஒரு மீடியேட்டர் என்றும் தியேட்டர்காரர்கள் அவரை பணம் கேட்டு நெருக்கியதால் அப்படி ஒரு சூழலுக்கு போனார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.